திருநெல்வேலி
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் பாரதிநகரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் முருகன் முத்துக்குமாா் (27). தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலி பிரதான சாலையில் முக்கூடலில் இருந்து மேற்குநோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் மரத்தில் மோதியதாம். இதில், முருகன் முத்துக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பாப்பாக்குடி போலீஸாா், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
