தியாகராஜ நகரில் விநாயகா் கோயில் இடிப்பு: பக்தா்கள் போராட்டம்

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் விநாயகா் கோயில் கட்டடம் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.
Published on

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் விநாயகா் கோயில் கட்டடம் வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது. இதனை கண்டித்து பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தியாகராஜ நகரில் சிவந்திப்பட்டி சாலையில் சித்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயில், சாலையில் விதிமீறி கட்டப்பட்டிருப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டது.

இதுதொடா்பாக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கோயிலை இடிக்க வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வந்தனா்.

இதனைக் கண்டித்து பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் கோயில் கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியது. சிலைகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்ததால், அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனா்.

Dinamani
www.dinamani.com