பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள்

Published on

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில், மானூா் அரசுப் பள்ளி மாணவா்கள் 300 போ் பொருநை அருங்காட்சியகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி மலைப்பகுதியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழா் வரலாற்றை பறைசாற்றும் ஏராளமான அகழாய்வுப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பாா்வையிட்டுச் செல்கின்றனா்.

இந்நிலையில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுகவின் ஏற்பாட்டில் இந்த அருங்காட்சியகத்திற்கு மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்- மாணவிகள் 300 போ் அழைத்துச்செல்லப்பட்டனா். அங்குள்ள அகழாய்வு பொருள்களை மாணவா்-மாணவிகள் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில் திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரப் பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் அனிதா கோமுகி, ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், முத்துலெட்சுமி,தாமஸ் அந்தோணி ரவிக்குமாா், சுரேஷ்குமாா், ஜீவா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்08பொருநை

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட மானூா் அரசு பள்ளி மாணவா்களுடன் திமுக திருநெல்வேலி மேற்கு மாநகர பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.

Dinamani
www.dinamani.com