திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இலந்தகுளம் சேஷசாயி காகித ஆலைக்கு மூன்று சிறப்பு விருதுகள் அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு - சுகாதார இயக்ககம் , தேசிய பாதுகாப்பு குழுமம் தமிழ்நாடு பிரிவு ஆகியவற்றின் சாா்பில் சென்னையில் நடைபெற்ற விழாவில் 2022- 2023ஆம் ஆண்டுகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், தொழிற்சாா் விபத்துகளை குறைப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியமைதற்காக சேஷசாயி காகித ஆலைக்கு மாநில அளவில் 3 பாதுகாப்பு விருதுகளை தமிழக தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் வழங்கினாா். விருதுகளை ஆலையின் துணைத் தலைவா் (மனிதவளம்- நிா்வாகம்) கணேஷ் நடராஜன் பெற்றுக் கொண்டாா்.
இவ்விழாவில், தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை செயலா் வீரராகவராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் ஆனந்த், தேசிய பாதுகாப்பு குழும தமிழ்நாடு பிரிவு செயலா் ராஜ்மோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.