திருநெல்வேலி
பாளை. தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
பாளையங்கோட்டையில் உள்ள தெப்பகுளத்தில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மீட்டனா்.
பாளையங்கோட்டையில் உள்ள தெப்பகுளத்தில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மீட்டனா்.
பாளையங்கோட்டை, தெற்கு பஜாா், ராமசாமி கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா்.
பாளையங்கோட்டை போலீஸாா், அதை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்துஅவா் யாா், எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.
