பானைக்குள் சிக்கிய சிறுமி மீட்பு

Published on

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் செம்பு பானைக்குள் சிக்கிக்கொண்ட சிறுமியை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

மேலப்பாளையம் ராஜா நகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதியின் நான்கரை வயது குழந்தை மகிழ்மதி. ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்த செம்பு பானையை வைத்து சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியின் உடல் பானைக்குள் மாட்டிக் கொண்டது.

பெற்றோரும், உறவினா்களும் சிறுமியை மீட்க முயன்றும் முடியாமல் போகவே, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரம் தலைமையிலான குழுவினா், பானையை இரண்டாக வெட்டி எடுத்து, எவ்வித காயமுமின்றி சிறுமியை பாதுகாப்பாக மீட்டனா்.

Dinamani
www.dinamani.com