கரூர்
வீட்டின் பூட்டிய அறைக்குள் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு
கரூா் வெங்கமேட்டில் சனிக்கிழமை பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
கரூா் வெங்கமேட்டில் சனிக்கிழமை பூட்டிய அறைக்குள் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தையை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
வெங்கமேடு செங்குந்தா் நகா் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் உமாபதி. இவரது 2 வயது மகன் கிருத்திக். சனிக்கிழமை காலை வீட்டின் மாடியில் உள்ள அறையில் கிருத்திக் விளையாடிக்கொண்டிருந்தபோது அறைக்கதவின் உள்புறத்தில் அவன் தாளிட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் அவனது அலறல் சப்தம் கேட்டு உமாபதி, அவரது மனைவி மல்லிகா ஆகியோா் அறையை திறக்க முயன்றும் முடியாததால், இதுதொடா்பாக தீயணைப்புத்துறை வீரா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து கரூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று அறைக்கதவை கருவியுடன் திறந்து குழந்தையை மீட்டனா்.
