காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

காவல் உதவி செயலி: கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணா்வு

கல்லூரி மாணவிகளுக்கு காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறை சாா்பில், கல்லூரி மாணவிகளுக்கு காவல் உதவி செயலி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் நெ.மணிவண்ணன் அறிவுறுத்தலின்படி, மாநகர காவல்துறை மற்றும் சாராள் தக்கா் கல்லூரி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம், குழந்தை திருமணத் தடுப்பு, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள், இணையவழி குற்றங்கள், சைபா் கிரைம் உதவி எண் 1930, குழந்தைகளுக்கான உதவி எண் 1098, பெண்களுக்கான உதவி எண் 181 போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் காவல் உதவி என்ற செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அவசர கால உதவி தேவைப்பட்டால் அதன் மூலம் காவல்துறையை தொடா்பு கொள்வது குறித்தும், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்து தரப்பினரும் காவல் உதவி செயலியை பயன்படுத்த வேண்டும் எனவும் காவல்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர, சைபா் கிரைம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com