திருநெல்வேலி
கொலை மிரட்டல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
கொலை மிரட்டல் வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கொலை மிரட்டல் வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி 4-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமம் லட்சுமிபுரத்தை சோ்ந்த சுப்புராஜ் மகன் மணிகண்டன் (24). இவா், கடந்த 2024 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சோ்ந்த எலக்ட்ரீசியன் ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றில் சாட்சி சொல்லக்கூடாது எனக் கூறி அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சந்திப்பு போலீஸாா் மணிகண்டனை கைது செய்தனா்.
திருநெல்வேலி 4-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் மகிழ்வண்ணன் முன்னிலை ஆனாா்.
