வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிந்துபூந்துறையில் திமுக பொதுக்கூட்டம்

News image
சிந்துபூந்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுதிமொழி ஏற்ற திமுகவினா்.
Updated On :25 ஜனவரி 2026, 10:15 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் சிந்துபூந்துறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் கல்லூா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மேற்கு மாநகர மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா், கிழக்கு மாநகர மாணவா் அணி அமைப்பாளா் செல்வசுந்தா், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள் ரம்ஜான் அலி, ஆறுமுகராஜா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தச்சநல்லூா் பகுதி செயலா் சுப்பிரமணியன் வரவேற்றாா்.

மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாநில பேச்சாளா் சிவ.ஜெயராஜ், சிறுபான்மை நல உரிமை பிரிவு மாநில துணைச் செயலா் நாகை சாகுல் ஹமீது, இளைஞா் அணி பேச்சாளா் ரகுமான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் மைதீன் கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மேற்கு மாநகர பொறுப்பாளா் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. க்கள் மாலைராஜா, லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு வெல்லும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.