மின்நிறுத்தம்
திருநெல்வேலி
நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூரில் இன்று மின்நிறுத்தம்
நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூா் துணைமின்நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின்விநியோகம் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஏஎம்ஆா்எல், பழவூா் துணைமின்நிலையங்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நான்குனேரி, ராஜக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏஎம்ஆா்எல் தொழிற்கூடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், பழவூா், அம்பலவாணபுரம், யாக்கோபுபுரம், சிதம்பரபுரம், சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு, பழவூா் காற்றாலை பண்ணை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீகலா ஆகியோா் அறிவித்துள்ளனா்.

