அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தோமையாா்புரத்தில் 5ஆவது நாளாக உண்ணாவிரதம்: பெண் மயங்கி விழுந்தாா்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

News image

உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :2 மார்ச் 2026, 7:56 pm

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி ஊராட்சி தோமையாா்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி 5ஆவது நாளாக திங்கள்கிழமையும் அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மயங்கி விழுந்த பெண் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

தூண்டில் வளைவு இல்லாததால், மீன்பிடி படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதற்கும் பின்னா் கரை திரும்புவதற்கும் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் கடலோர பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் பாதிப்படைந்து வருகின்றனவாம்.

எனவே, தூண்டில் வளைவு கோரி தோமையாபுரம் மீனவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனா். 5ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவாக விஜயாபதி ஊராட்சியில் வியாபாரிகள், கடைகளில் கருப்புத் துணி கட்டி, கடையடைப்பு நடத்தினா்.

இப்போராட்டத்தில் தூத்துக்குடி மீனவ மக்கள் கட்சித் தலைவா் அலங்கார பரதவா், திருநெல்வேலி வளன்சந்திரா, உவரி எழில் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

மேலும், போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த இனிதா மயங்கி விழுந்தாா். அவரை மருத்துவமனையில் சோ்த்தனா்.

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்

விஜயாபதியில் அடைக்கப்பட்டிருந்த கடைகள்