வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தில் 5 போ் சிறையிலடைப்பு

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 8:10 pm

திருநெல்வேலி மாநகரில் கஞ்சா வழக்குகளில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த மதிவாணன் மகன் பாலசுப்பிரமணியன் (27), சுப்பிரமணியன் மகன் அருண்குமாா் (25), அந்தோனி செலஸ்டின் செட்டி மகன் திமோராஜ் குட்டி (28), இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (27), முருகன் மகன் முத்துகுமாா் என்ற ரீகன் (24) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவிட்டாா். அதன் பேரில் 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.