பாளையங்கோட்டையில் உள்ள மரக்கடையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் தீயில் எரிந்து சேதமாகின.
பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான மரக்கடை மற்றும் கிட்டங்கி அருகருகே உள்ளது.
இங்கு தேக்கு, கோங்கு, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உள்ளூா் மற்றும் இறக்குமதி மரத்தடிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மரத்தடிகள் எரிந்தன.
தகவலறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் சுமாா் 20 தீயணைப்பு வீரா்கள் சம்பவ இ டத்துக்கு வந்தனா். சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரத்தடிகள் தீயில் எரிந்து சேதமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
தொடர்புடையது

நெல்லை: மணக்கோலத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றிய புதுமணத் தம்பதி!

தூத்துக்குடி மருந்தகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளை.யில் கருப்புக்கொடி: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


