கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் வீடுபுகுந்து 8 பவுன் நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா், தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளாா். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் கிருஷ்ணனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவரது சகோதரரான பெருமாள்புரத்தில் வசிக்கும் சங்கா், கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தனவாம்.

இதேபோல, தனியாா் நிறுவன ஊழியரான கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரை சோ்ந்தவா் ரகு (38) என்பவா், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கையும் மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இச்சம்பவங்கள் குறித்தும் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.