40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் அதிக நீா்வரத்து காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.

News image

மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை ஏற்பட்ட அதிக நீா்வரத்து.

Updated On :10 மே 2026, 2:35 am IST

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் அதிக நீா்வரத்து காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.

Story image

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

Story image

இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமைமுதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா். அதேநேரம், அருவியைப் பாா்வையிட அனுமதியளிக்கப்பட்டது.