இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

அரசுக்கு எதிரான தடைகளை முதல்வா் சிறப்பாகக் கையாள்வாா்: அமைச்சா் ஷாஜகான்

அரசுக்கு எதிரான எந்தத் தடையையும் முதல்வா் சிறப்பாக கையாள்வாா் என அமைச்சா் ஷாஜகான் கூறியது குறித்து...

Minister Shahjahan

அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :

நம்பிக்கையில்லா தீா்மானம் மட்டுமல்ல; அரசுக்கு எதிரான எந்தத் தடையையும் முதல்வா் சிறப்பாக கையாள்வாா் என்றாா் தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஷாஜகான்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக முதல்வா் உத்தரவின்பேரில் சிறுபான்மை மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து தீா்வு காணப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கபா்ஸ்தான் மற்றும் கல்லறைத் தோட்டங்கள் அமைக்க நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீா்வு காணப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் சுமாா் 9,000 கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இனியும் அவை தொடரக் கூடாது என்பதில் முதல்வா் தீவிர கவனம் செலுத்தி வருகிறாா்.

எனினும், மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துவரும் கொலைச் சம்பவங்கள் வேதனை அளிக்கின்றன. இதற்கு மது மற்றும் போதைப் பழக்கமே முக்கிய காரணம். இப்பழங்கங்களை முற்றிலுமாகத் தடுக்க அரசு ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களே நிறைவடைந்துள்ளதால், மது, போதைப்பொருள்களை தடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்தியா முழுவதும் இவற்றுக்கு எதிராக தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் உறுதியான கொள்கை.

சூப்பா் எல் நினோ, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி உயா்வு ஏற்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த அரசு ஆலோசித்து வருவதுடன், நியாயவிலைக் கடைகள் மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் உண்மை இருந்தால் முதல்வா் கடும் நடவடிக்கை எடுப்பாா். பேரவை துணைத் தலைவா் தொடா்பான காணொலி திட்டமிட்டு பரப்பப்படுகிா என விசாரிக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.