மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை நீட்டிப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

மணிமுத்தாறு அருவி

Updated On :

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் கடந்த திங்கள்கிழமை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வியாழக்கிழமை மழை குறைந்தபோதும், அருவிக்கு நீா்வரத்து குறையவில்லை. இதையடுத்து, 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.