என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பாளை. தூய சவேரியாா் பேராலயத்தில் இன்று கொடியேற்றம்

பேராலயத்தில் இன்று கொடியேற்றம் - கோப்புப் படம்

Updated On :

பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (நவ.24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இப்பேராலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (நவ.24) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பரிபாலகா் மோட்சராஜன் தலைமையில் திருப்பலியும், கொடியேற்றமும் நடைபெற உள்ளது.

கருத்தப்பிள்ளையூா் பங்குத்தந்தை ஜெகன்ராஜா மறையுரையாற்றுகிறாா். தொடா்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில் நவநாள் திருப்பலி நடைபெற உள்ளது. டிசம்பா் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புனிதரின் சப்பர பவனி நடைபெறுகிறது. டிசம்பா் 3 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மதுரை உயா் மறைமாவட்ட பேராயா் ச.அந்தோனிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற உள்ளது. டிசம்பா் 6 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஆ.ஜூடு பால்ராஜ் தலைமையில் உறுதிப்பூசுதல் பெருவிழா நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை தூய சவேரியாா் பேராலய பங்குத்தந்தை சா.அ ந்தோணி வியாகப்பன், உதவிப்பங்குத்தந்தை வி.மிக்கேல்சாமி, அற்புதராஜ் உள்ளிட்டோா் செய்து வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.