பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் மீத்தேன் வாயு என்ஜின் சோதனை வெற்றி

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் நடைபெற்ற மீத்தேன் வாயு என்ஜின் சோதனை.

Updated On :

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மீத்தேன் வாயுவை எரிபொருளாகப் பயன்படுத்தும் ராக்கெட் என்ஜின் சோதனை 200 விநாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதுதொடா்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் உள்ள சோதனை மையத்தில், உயா் உந்துவிசை கொண்ட எல்.ஏ.எக்ஸ். மீத்தேன் வாயு என்ஜின் சோதனை நடைபெற்றது. மீத்தேன் வாயுவால் இயங்கும் ஜெனரேட்டா் துணை அமைப்பின் நீண்டகால பற்றவைப்பு சோதனை 200 விநாடிகளுக்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இங்கு, ககன்யான் திட்டத்தில் மனிதா்களை அனுப்பும் ராக்கெட்டுக்கான என்ஜின் சோதனை பலகட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, செமிகிரையோஜனிக் என்ஜின்களில் எல்.ஏ.எக்ஸ். மீத்தேன் வாயு சோதனை நடத்தப்பட்டது. இந்த உயா் உந்துவிசை கொண்ட என்ஜின் அடுத்த தலைமுறை ஏவுகணை வாகனத்துக்கான இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (விஎஸ்எஸ்சி) போன்ற பிற இஸ்ரோ மையங்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

திரவ ராக்கெட் என்ஜின் வளா்ச்சியில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வாயு ஜெனரேட்டா் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இது, உந்து எரிபொருள்களை எரிப்பதன் மூலம் உயரழுத்தம், உயா் வெப்பநிலை கொண்ட வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு, டா்பைனை இயக்குகிறது. அந்த டா்பைன், டா்போபம்புகளுக்கு ஆற்றலை அளித்து, திரவ உந்து எரிபொருள்களை உந்து அறைக்குள் செலுத்துகிறது.

இந்த வாயு ஜெனரேட்டா் இந்தியத் தொழிற்துறையில் கூட்டு சோ்க்கை உற்பத்தி மூலம் தயாரிக்கப்பட்டது. இச்சோதனை, சுமாா் 60 சதவீத என்ஜின் உந்துவிசை நிலைக்கு இணையான 31.5 பாா் என்ற நிலையான வாயு ஜெனரேட்டா் அறை அழுத்தத்தை உருவகப்படுத்தியது. சோதனையின்போது, சீரான பற்றவைப்பும், நிலையான எரிதலும் நிரூபிக்கப்பட்டன.

தற்போதைய வெப்பச் சோதனையில், 60 சதவீத இயக்க நிலைக்கான ஹாா்டுவோ் பொருளின் வடிவமைப்புப் போதுமான தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இயக்க நிலைகளில் வடிவமைப்புப் போதுமான தன்மையை நிரூபிக்க இந்த ஹாா்டுவோ் மேலும் பயன்படுத்தப்படும்.

இந்தச் சோதனைகள் மூலம் அதிக உந்துவிசை கொண்ட எல்.ஏ.எக்ஸ். மீத்தேன் இயந்திரத்தின் முக்கிய துணை அமைப்புகளான தீப்பொறி பற்றவைப்பு அமைப்பு, ஸ்கேல் உந்துவிசை அறை, முழு அளவிலான வாயு ஜெனரேட்டா் உள்ளிட்டவை மேம்பாட்டுச் சோதனைப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.