ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியிடம் ரூ.1.64 லட்சம் இணைய மோசடி
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.64 லட்சம் இணையவழியில் மோசடியாக எடுக்கப்பட்டது குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மோசடி
திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.64 லட்சம் இணையவழியில் மோசடியாக எடுக்கப்பட்டது குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்தவா் 60 வயதான ஓய்வுபெற்ற எல்லைப் பாதுகாப்புப் படை ஆய்வாளா். கடந்த செப்.30-ஆம் தேதி காலை இவரது வங்கிக் கணக்கில், ஒரு தனியாா் வங்கியின் கணக்கு ஒன்று பயனாளிப் பட்டியலில் சோ்க்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஆனால் இவா் அது போன்று எந்த அனுமதியும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக அவா் கணக்கை முடக்குவதற்குள், 3 தவணைகளாக ரூ. 1,64,000-ஐ ஐஎம்பிஎஸ் முறையில் மா்மநபா்கள் வங்கிக் கணக்கில் எடுத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து அவா் உடனடியாக இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவின் 1930 எண்ணில் புகாா் அளித்தாா். அப்புகாரின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



