மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூா் பள்ளி மாணவா் சாதனை

மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

பதக்கம் வென்ற மாணவா் ஊ. லெபின் சுதா்ஷன்.

Updated On :

மாநில அளவிலான வில் வித்தைப் போட்டியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா்.

தமிழ்நாடு யூத் பீல்டு ஆா்ச்சரி அசோசியேஷன் அமைப்பின் சாா்பில் மாநில அளவிலான உள்ளரங்க வில்வித்தைப் போட்டி சென்னை திருவேற்காடு அா்ஜூனா வில் வித்தை அகாதெமி உள்ளரங்க வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிக்கு தமிழ்நாடு இளைஞா்கள் விளையாட்டு அரங்கத்தின் செயலா் ரத்னசபாபதி தலைமை வகித்தாா். தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 19 வயதுக்குள்பட்ட 350 மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இதில், வீரவநல்லூா் பாரதியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஊ. லெபின் சுதா்ஷன் 2 தங்கப் பதக்கமும், 1 வெள்ளிப் பதக்கமும் மற்றும் கோப்பையை பெற்றாா். மாணவரை, பள்ளியின் தலைமையாசிரியா் செல்வராஜன், உடற்பயிற்சி ஆசிரியா்கள் ராஜகோபால், செந்தில், வில் வித்தை ஆசிரியா் பூல்பாண்டி, மாவட்டச் செயலா் ஜெகமோகன், ஆசிரியா்கள் தியாகராஜன், சுந்தரம், சீதாலெட்சுமி உள்ளிட்டோா் பாராட்டினாா். அவா் கோவாவில் நடைபெறவுள்ள தேசிய வில் வித்தைப் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.