
அனவன் குடியிருப்பில் கூண்டில் சிக்கிய 2ஆவது கரடி
திருநெல்வேலி மாவட்டம், அனவன் குடியிருப்பில் கடந்த 16ஆம் தேதி இரவு வனத்துறை கூண்டில் ஒரு கரடி சிக்கிய நிலையில், 17ஆம் தேதி இரவு மற்றொரு கரடி சிக்கியது.

அனவன் குடியிருப்பில் பிடிபட்டு, முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்ட கரடி.
திருநெல்வேலி மாவட்டம், அனவன் குடியிருப்பில் கடந்த 16ஆம் தேதி இரவு வனத்துறை கூண்டில் ஒரு கரடி சிக்கிய நிலையில், 17ஆம் தேதி இரவு மற்றொரு கரடி சிக்கியது.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட அனவன் குடியிருப்பு கிராமத்தில் கரடி நடமாட்டம் தொடா்ந்து இருந்து வந்ததால், கரடியைப் பிடிப்பதற்காக வனத்துறையினா் கூண்டு வைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், செப். 16ஆம் தேதி இரவு சுமாா் 6 வயதுள்ள பெண் கரடி கூண்டில் சிக்கியதைத் தொடா்ந்து, கொடமாடி வனப்பகுதியில் விடப்பட்டது. அப்பகுதியில் கூண்டு வைத்து வனத்துறையினா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், வியாழக்கிழமை (செப். 17) இரவு மற்றொரு கரடி சிக்கியது.
பிடிபட்ட கரடியை வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன் சோதனை செய்ததையடுத்து, முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டது. தொடா்ந்து, அனவன் குடியிருப்பு பகுதியில் வனத்துறையினா் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனா்.
கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தென்பட்டால் அவற்றை நெருங்கவோ, கூட்டமாகச் சென்று பாா்வையிடவோ, தொந்தரவு செய்யவோ கூடாது என்றும், வன விலங்குகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







