: தக்கலை ஷெய்கு பீர்முகம்மது ஸாஹிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டுப் பெருவிழா சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா ஆண்டுதோறும் தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் நடத்தப்படுகிறது. நிகழாண்டு விழா சனிக்கிழமை தொடங்கி இம் மாதம் 25-ம் தேதிவரை நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு தர்க்காவில் இருந்து கொடி எடுத்துவரப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் சந்தனம் பூசும் நிழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பீரப்பாவின் புகழ் மாலை பாட கொடியேற்றப்பட்டது.
முல்லிம் அúஸாசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், ஜமாத் தலைவர்கள், ஊர்மக்கள் பங்கேற்றனர்.
விழாவில் தினமும் மௌலிது ஓதுதல், இம் மாதம் 16 முதல் 23-ம் தேதி வரை பீர்முஹம்மது அப்பா அரங்கில் இரவு 9 முதல் 11 மணிவரை பல்வேறு தலைப்புகளில் மார்க்கப் பேருரை நடைபெறும்.
கோவை அன்சாரிய்யா அரபி கல்லூரி முதல்வர் எ. அப்துல் மாலிக் சிராஜி, பேராசிரியர் எஸ். முஹம்மது யூசப் சிராஜி, சென்னை செங்குன்றம் தலைமை இமாம் எ. ஹாஜா மொய்த்தீன் ஜமாலி, சென்னை பெரம்பூர் ரஹ்மானிய்யா ஜும்மா மஸ்ஜித் இமாம் வி.எஸ். அன்வர் பாதுஷா உலவி ஆகியோர் பேசுகின்றனர்.
ஞானப்புகழ்ச்சி பாடுதல்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானப்புகழ்ச்சி பாடுதல் இம் மாதம் 24-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடைபெறும். இதில், இம் மாவட்ட இஸ்லாமியர் மட்டுமன்றி பல்வேறு மதத்தினரும், கேரள மாநிலத்தில் இருந்து திரளானோரும் பங்கேற்பர். 25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நடைபெறும்.
ஏற்பாடுகளை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் தலைவர் பொறியாளர் அப்துல் ஜபார், துணைத் தலைவர் பீர்முகம்மது, செயலர் எம். முகம்மது அபு ஹனீபா, பொருளாளர் எம்.பி. ஹாரிஸ், விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் பீர்பிர்தியோஸ், செயலர் எஸ். முகம்மது மைதீன், பொருளாளர் எம். மைதீன் பீர்முகம்மது, துணைச் செயலர் சுபியான், நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜஸ்தானில் கடும் புழுதிப் புயல்! | Rajastan | Shorts

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


