அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி இம் மாதம் 17 முதல் 19-ம் தேதி வரை நகர, ஒன்றியங்களில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் அதிமுக ஒன்றிய, நகரச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சிவ. குற்றாலம் தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார்.
நாஞ்சில் முருகேசன் எம்எல்ஏ, மாவட்ட இணைச் செயலர் லிசம்மாள், பொருளாளர் டோமினிக், ஒன்றியச் செயலர்கள் கே.சி.யூ. மணி, தம்பித் தங்கம், ராமகிருஷ்ணன், சிவசெல்வராஜன், மத்தியாஸ், மைதீன், ஜான்தங்கம் ஜார்ஜ், சுதர்சன், நகரச் செயலர்கள் சி.என். சுரேஷ், ஜபகர் சாதிக், ராஜன், அருள்தாஸ், தொகுதிச் செயலர் பி.டி. பிள்ளை, எஸ்.எம். பிள்ளை, மோகன், ஆறுமுகராஜா, சேவியர் மனோகரன், இ.பி.என். அலெக்ஸ், நவாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி மாவட்டத்தில் 9 ஒன்றியங்கள், 4 நகரங்களில் இம் மாதம் 17 முதல் 19 வரை பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தெருமுனைப் பிரசாரம் நடத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிக எண்ணிகையில் அதிமுகவினர் வென்றதையடுத்து கட்சியின் பொதுச் செயலருக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








