
அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் அளிப்பு
செம்பருத்திவிளையில் உள்ள கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
செம்பருத்திவிளையில் உள்ள கோதநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தக்கலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனீஸ் தலைமை வகித்தார். குமாரபுரம் பேரூராட்சித் தலைவர் அனிதா ஜெங்கின்ஸ் முன்னிலை வகித்தார். முட்டைக்காடு ஜவகர் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் டி.ஜெங்கின்ஸ், கோதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகத்தை வழங்கினார்.
விழாவில் மருத்துவர்கள் லினு கிரேஷியா, நவீன் பிராங்க், அதிமுக வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் சௌந்தர்ராஜ்,பேரூராட்சி உறுப்பினர்கள் ராஜேஷ், லிசாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் மனோகரன், பீர் முகம்மது உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






