கன்னியாகுமரி மாவட்டத்தில், 24,606 மாணவர், மாணவிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வை எழுதினர்.
நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் செய்தியாளர்களிடம் கூறியது:
குமரி மாவட்டத்தில் தக்கலை, குழித்துறை, நாகர்கோவில் என மொத்தம் 3 கல்வி மாவட்டங்களில் 221 பள்ளிகளைச் சேர்ந்த 24,606 பேர் (மாணவர்கள் 11,288, மாணவிகள் 13,318) 83 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
இவர்களில் பார்வையற்ற மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக அவர்கள் சொல்லுவதை எழுதுபவர் பணிக்காக 20 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 2, குழித்துறை கல்வி மாவட்டத்தில் 10, தக்கலை கல்வி மாவட்டத்தில் 8 என 20 பார்வையற்ற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகள் எந்த ஒரு இடையூறும் இன்றி நடைபெற காவல் துறை சார்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் வருவாய்த் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3

டெஸ்ட் கிரிக்கெட்டில் தமிம் இக்பால் சாதனையை முறியடித்த மொமினுல் ஹக்!

ஜார்க்கண்டில் 20-வது நாளாக மாணவர்கள் போராட்டம்! 600 பேர் மீது வழக்குப் பதிவு!

சட்ட நடவடிக்கை? விக்ரமுக்கு கெடு விதித்த வனத்துறை!
விடியோக்கள்

கருணாநிதி,கண்ணதாசன் நட்பும் பிரிவும்| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -3


