தேசிய பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
Updated on
1 min read

ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மீனவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
ஒக்கி புயல் பாதிப்புகளை பார்வையிட குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வந்த மத்திய ஆய்வுக் குழுவிடம்,  சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் பி. ஜஸ்டின் ஆன்றணி அளித்த மனு: ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் கருதி அந்த சட்டத்தில் போதிய திருத்தங்களை கொண்டு வந்து,  ஒக்கி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
தூத்தூர் மண்டலத்தில் பொருத்தமான இடத்தை தேர்வு செய்து, தேசிய பேரிடர் மீட்பு மைய கிளை அலுவலகம், கடலோர பேரிடர் மீட்பு மைய கிளை மற்றும் வானிலை ஆய்வு மைய கிளை ஆகியவற்றை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com