ஜீப் மோதி அரசுப் பேருந்து நடத்துநர் சாவு
புதுக்கடை அருகே உள்ள மூன்றுமுக்கு பகுதியில் ஜீப் மோதியதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் இறந்தார்.


புதுக்கடை அருகே உள்ள மூன்றுமுக்கு பகுதியில் ஜீப் மோதியதில் பலத்த காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநர் இறந்தார்.
புதுக்கடை பனவிளை பகுதியைச் சேர்ந்த செல்லநாடார் மகன் ரவிச்சந்திரன் (54). இவர் குழித்துறை பணிமனையில் அரசுப் பேருந்து நடத்துநராக பணியாற்றி வந்தார். இவர், வியாழக்கிழமை புதுக்கடையிலிருந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்றுமுக்கு பகுதியில் எதிரே வந்த ஜீப் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த புதுக்கடை போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...