வெட்டுவெந்நி சாலையில் நெரிசல்: நடைபாதை அமைக்க வலியுறுத்தல்
மார்த்தாண்டம் மேம்பாலப் பணி காரணமாக வெட்டுவெந்நி பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலையையொட்டி


மார்த்தாண்டம் மேம்பாலப் பணி காரணமாக வெட்டுவெந்நி பகுதியில் ஏற்பட்டுள்ள நெரிசலை தவிர்க்கும் வகையில், சாலையையொட்டி நடைபாதை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெட்டுவெந்நியில் ஆற்றுப் பாலம் அருகிலிருந்து பம்மம் பகுதி வரை 2.4 கி.மீ. தொலைவுக்கு மார்த்தாண்டம் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வெட்டுவெந்நியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
குழித்துறையிலிருந்து வெட்டுவெந்நி - மார்த்தாண்டம் பகுதிக்கு இருசக்கர வாகனங்களை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் குறுகலான பாதையாக உள்ளதால், இருசக்கர வாகனங்கள் செல்லும் பாதை வழியாக பாதசாரிகள் நடந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து, வெட்டுவெந்நியில் சாலையோரமாக பாதசாரிகள் நடந்து செல்வதற்காக தனியாக பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அண்மையில் தொடக்கியது. ஆனால் இப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மேம்பாலப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும், பாதசாரிகள் நடந்து செல்வதற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெட்டுவெந்நியில் பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக சாலையோரமாக தனிப் பாதை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...