விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நாகர்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:35 am

DIN

குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பின் சார்பில், அமைப்பின் ஆண்டு விழா மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  இதில், பேராசிரியர் இரா.மோகனின் பன்முக நோக்கில் புறநானூறு,  பேராசிரியர் கா.ஆபத்துகாத்தபிள்ளையின் தமிழர் பண்பாட்டுக் கூறுகள்,  ஏர்வாடியாரின் கொஞ்சம் கனவு, கொஞ்சம் கவிதை ஆகிய  நூல்களை  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தொழிலதிபர் அறுபது சுப்பையா, மருத்துவர் தாணப்பன்,  பாரத ஸ்டேட் வங்கி உதவி பொதுமேலாளர் மு. அருணகிரி ஆகியோர் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
தமிழறிஞர்கள் உ.வே.சா. விருதுபெற்ற வேலூர் ம.நாராயணன், வை.சுப்பிரமணியன், கீழப்பாவூர் சண்முகையா ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.  நெல்லை கவிநேசன்,  வானதி ராமநாதன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
சிறந்த கவிதை நூலாக தேர்வு செய்யப்பட்ட பரம்பொருள் ரகசியம் நூலாசிரியர் மற்றும் வை.மாதவன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  கவிதை உறவு அமைப்பாளர் கு.சிதம்பரநடராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.