அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை
சவூதி அரேபிய நாட்டிலுள்ள அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


சவூதி அரேபிய நாட்டிலுள்ள அபுதாபியில் சிறைபிடிக்கப்பட்ட குமரி மீனவர்கள் 5 பேரை மீட்க மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து அமைச்சரின் நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜெர்னால்டு ரீகன், கரோல் ஜெகின், ஜான் பிரபாகர், ரீகன் ஜியோ கிளார்வின், மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் ஸ்டாலின் ஆகியோர் கஸ்வானி என்ற படகில் கத்தார் வாஹ்ரா என்ற பகுதியிலுள்ள கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கடலில் மீன்பிடித்தனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அபுதாபி கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மேற்கண்ட 5 பேரையும் விடுதலை செய்யவேண்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார்.
இதையடுத்து, கரோல் ஜெகின், ரீகன், ஜான்பிரபாகர் மற்றும் ஜோஸ் ஸ்டாலின் ஆகிய 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் அபுதாபியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் 4 பேரும் ஓரிரு நாள்களில் சொந்த ஊர் திரும்புவர். ஜெர்னால்டு ரீகனும் விரைவில் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என இந்திய தூதரக அதிகாரி தினேஷ்குமார் கூறியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...