கேரளமாநிலம் கொச்சியில் கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் மாயமான 3 மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட மீனவப்பேரவைத் தலைவர் ஜோர்தான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த ஆன்றனி(35), சேவியர்(40), ரம்யான்(41) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன்(32), கேரளத்தைச் சேர்ந்த பிரின்ஸ்(40), ஜாண்சன்(45) ஆகியோர் கடந்த வாரம் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அப்போது கேரளம் கொச்சி ஆழ்கடலில் இவர்கள் சென்ற படகில் கப்பல் மோதி விபத்துக்குள்ளனது. இதில் ஆன்றணி இறந்தார். அவரது சடலம் மீட்கப்பட்டது. சேவியர், கார்த்திகேயன் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பிரின்ஸ், ஜான்சன், ரம்யான் ஆகிய 3 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்த 3 மூன்று மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த ஆன்றணி குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.