நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பு - பீச்ரோடு சந்திப்பு சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில், போக்குவரத்து மாற்றம் குறித்து வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற துணைச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை: நாகர்கோவில் நகரின் முக்கிய சாலையான பீச் ரோடு சந்திப்புப் பகுதியில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு வரை சாலை சீரமைப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கன்னியாகுமரி மற்றும் அஞ்சுகிராமம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பீச்ரோடு சந்திப்பு வந்தவுடன் நாகர்கோவிலுக்கு எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று தெரியாமல் தடம் மாறிச் செல்கின்றனர்.
எனவே, பீச்ரோடு சந்திப்பிலிருந்து, ஆயுதப்படை முகாம் ரோடு திரும்பும்பகுதி, பொன்னப்பநாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர் போன்ற பகுதிகளில் வழிகாட்டி பலகை தெளிவாக குறிப்பிட்டு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போக்குவரத்து காவலரை இரவு நேரங்களிலும் பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








