பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பிஎம்எஸ் மாவட்டத் தலைவர் கே.விஸ்வநாதன் தலைமை வகித்தார். பாரதிய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.முருகன், மாவட்ட அமைப்பாளர் பி.தாணுமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், "கட்டுமானம், உடலுழைப்பு நலவாரிய உறுப்பினர்களுக்கான அரசின் பல்வேறு உதவித்தொகை மற்றும் ஓய்வூதிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்கத் தேவையான நிதியை நல வாரியங்களுக்கு வழங்குதல், நல வாரியம் அளிக்கும் ஓய்வூதியத்தை மாதம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்துதல், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவருதல், ஆட்டோ, வாகனத் தொழிலாளர்களுக்கு கல்வித் தகுதி நிபந்தனை இல்லாமல் பேட்ஜ் வழங்குதல், மூடப்பட்ட முந்திரி ஆலைகளை திறத்தல், துறைமுகத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத்தலைவர் ஆர்.ஜெயகுமார், வாகனதொழிலாளர் சங்க துணைத்தலைவர் ராஜேஷ் குமார், பொதுச்செயலர் பாபுலோகன், நகைத் தொழிலாளர் சங்க மணிகண்டன், ஜெயபாலன், நடேசன், குமாரதாஸ், கிரிஜா, முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செந்தில்ஆறுமுகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




