காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, திமுக கூட்டணி கட்சியினர் தக்கலை, நாகர்கோவிலில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தக்கலை அண்ணா சிலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, திமுக நகரச் செயலர் மணி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் அருளானந்த ஜார்ஜ், காங்கிரஸ் நகரத் தலைவர் ஹனுகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கு.லாரன்ஸ் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார். திமுக மேற்கு மாவட்டச் செயலர் மனோதங்கராஜ் எம்எல்ஏ விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திமுக அவைத் தலைவர் பப்புசன், துணைச் செயலர் ஜாண் கிறிஸ்டோபர், முன்னாள் எம்.எல்.ஏ. தியோடர் ரெஜினால்டு , முன்னாள் நகர் மன்றத் தலைவர் ரேவன்கில், நிர்வாகிகள் கிறிஸ்டல் பிரேமலதா, ஜார்ஜ், வர்க்கிஸ், மரியசிசுகுமார், அலாவுதீன், மில்டன், காங்கிரஸ் வட்டார செயலர் ஜாண் கிறிஸ்டோபர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சேது மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்: தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, குமரி கிழக்கு மாவட்டச் செயலர் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தவறிவிட்டது. தமிழக அரசும் இதை வலியுறுத்தவில்லை. மாறாக, அதிமுக எம்.பி.க்கள் பாஜக துணையுடன் பாராளுமன்றத்தில் நாடகம் நடத்தி வருகின்றனர். ஜி.எஸ்.டி. பிற நாடுகளில் 18 சதவீதம் உள்ளது. ஆனால் இந்தியாவில் 28 சதவீதமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத்தருவேன் என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் 4 ஆண்டுகளாகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 5 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு பேராட்டத்துக்கு வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் அவர்.
இதில், நகரச் செயலர் மகேஷ் வரவேற்றார். எம்எல்ஏக்கள் ஆஸ்டின், பிரின்ஸ், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ பெர்னார்டு, இளைஞர் அணி துணை அமைப்பாளர் வழக்குரைஞர் வளர்அகிலன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் மகேஷ்லாசர், சேம்மோகன்ராஜ், மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தங்கமோகன், தி.க. மண்டலப் பொறுப்பாளர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








