மாற்று இடம் வழங்கியபின், குடியிருப்புகளை அகற்றவேண்டும் என அழகியபாண்டியபுரம், பெருந்தலைக்காட்டைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:
நாங்கள் பெருந்தலைகாட்டில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோரத்தில் குடியிருந்து வருகிறோம். அரசு புறம்போக்கான இந்த இடத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். எங்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்று வீட்டுவரியும் பல ஆண்டுகளாக செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் குடியிருப்புக்கு அருகில் வீட்டுமனை ஏற்படுத்தி வியாபாரம் செய்து வரும் தனிநபர் ஒருவருக்கு அனுசரணையாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்தில் எங்கள் குடியிருப்பு பகுதியை இடித்து அப்புறப்படுத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்கள் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவர்கள். ஆகையால் வேறு இடம் பார்த்து செல்லும் அளவிற்கு வசதி இல்லாதவர்கள். இதுகுறித்து இதற்கு முன்பு இருந்த மாவட்ட ஆட்சியரிடம், எங்களுக்கு அரசு மாற்று இடம் தந்த பின்னரே எங்கள் வீடுகள் இருக்கும் இடத்தை கையகப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, மாற்று இடம் ஏற்பாடு செய்து தருவதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.
ஆனால் தற்போது எவ்வித மாற்று ஏற்பாடும் செய்யாமல் திடீரென வரும் 10ஆம் தேதி எங்கள் வீடுகளை இடிக்கப்போவதாகவும், குடும்பத்துடன் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை காலி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
எனவே எங்கள் பகுதி மக்களுக்கு மாற்று இடவசதி செய்து கொடுத்த பின்னர் எங்களது குடியிருப்பு பகுதியை அகற்ற வேண்டும் எனவும், அதுவரை அதிகாரிகள் எங்களை குடும்பத்துடன் காலி செய்யவேண்டும் என மிரட்டுவதை தடை செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்

நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் கே.சி. வேணுகோபால்!

காா்கே, சோனியா, ராகுல் முடிவை ஆசீா்வாதமாக எடுத்துக்கொள்வோம்: சிவகுமாா்
மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு! போராட்டத்தில் இறங்கிய மக்கள்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

