குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தோவாளையில் பள்ளத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

தோவாளையில் பாடநூல் ஏற்றி வந்த லாரியின் டயர் பள்ளத்தில் பதிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:01 am IST

தோவாளையில் பாடநூல் ஏற்றி வந்த லாரியின் டயர் பள்ளத்தில் பதிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான பாட புத்தகங்கள், சிவகாசியில் இருந்து லாரிகள் மூலம் பள்ளிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டது. 
இதில், ஒரு லாரி நாகர்கோவில்- தோவாளை  தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளி வளாகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அதன் டயர்கள் கேபிள் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலையோர பள்ளத்தில் பதிந்தது.  இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இத்தகவலறிந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸார்,  மீட்பு வாகனம் உதவியுடன் லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். சம்பவம் நிகழ்ந்தது பள்ளி, அலுவலகங்களுக்குச் செல்லும் நேரம் என்பதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.