ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

பேச்சிப்பாறை அணை புனரமைப்பு பணியைப் பார்வையிட்ட விவசாயிகள்

பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர். 

Updated On :19 ஏப்ரல் 2018, 2:01 am IST

பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை பார்வையிட்டனர். 
குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணையில்  ரூ. 61.30 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இந்தப் பணிகளை  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  நிர்வாகிகள்  பார்வையிட்டனர். 
இந்நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.ரவி, மாநிலக் குழு உறுப்பினர் ஜெ.சைமன் சைலஸ், மாவட்டப் பொருளாளர் சதீஷ், மாவட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு  உதவிப் பொறியாளர்கள் லூயிஸ் அருள் செழியன், எட்வின் ஆகியோரிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.