குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா நாளை தொடக்கம்

நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் - பிரசன்னபார்வதி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 20 )  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:39 am IST

நாகர்கோவில் இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் - பிரசன்னபார்வதி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை (ஏப். 20 )  கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, கோயிலில் காலை 4.30 மணி முதல் 6  மணி வரை திருப்பள்ளி எழுச்சியும், 6 மணி முதல் 7.30 ம ணி வரை தேவார பஜனை நிகழ்ச்சியும், 9 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மாலை 6.30  மணிக்கு இருளப்பபுரம் சிவசக்தி மகளிர் மன்றத்தாரின் 1,008  திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெறுகிறது.  2 ஆம் திருவிழா சனிக்கிழமை (ஏப். 21)  காலை 7 மணிக்கு முருகப் பெருமானுக்கு சஷ்டி அபிஷேகம், 8.30  மணிக்கு திருவாதிரை திருவிழா அருள்மிகு நடராஜ மூர்த்தி, சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து  வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகின்றன. 
ஏப். 24இல் காலை 9  மணிக்கு திருவெம்பாவை அபிஷேகமும்,  பிற்பகல் 3  மணிக்கு துர்கா பூஜையும், இரவு 7  மணிக்கு சிவதேவஸ்தான சிவசக்தி மகளிர் மன்ற மாநாடும் நடைபெறுகிறது. 
ஏப். 25 ஆம் தேதி  இரவு 7  மணிக்கு 63 ஆவது இந்து சமய மாநாடு  நடைபெறுகிறது.  ஏப். 26  ஆம் தேதி இரவு 7 மணிக்கு அருள்மிகு பிரசன்ன பார்வதி சமேத பசுபதீஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். 
விழா ஏற்பாடுகளை சிவதேவஸ்தான நிர்வாகக்குழுத் தலைவர் வழக்குரைஞர் டி. உதயகுமார், துணைத் தலைவர்கள் கிருஷ்ணபெருமாள், பாலகிருஷ்ணன், பரசுராம் செயலாளர் ராஜகுமார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.