பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.சிங்காரன் தொடக்கவுரையாற்றினார். ஏ.ரதீஸ் வரவேற்றார்.
காவல்துறை, போக்குவரத்து துறையினர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது; பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டச் செயலர் ஏ.டி.மோகன் செயலர் அறிக்கை சமர்ப்பித்தார். கன்னியாகுமரி மாவட்ட நகைத் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தலைவர் ஜி.செலஸ்டின், சிஐடியூ நிர்வாகிகள் ஐடா ஹெலன், பொன்.சோபனராஜ், சட்ட ஆலோசகர் மரியஸ்டீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வில்சன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.