ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்: மே 3 ல் வீரர்கள் தேர்வு

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்கள் தேர்வு வியாழக்கிழமை (மே 3)   நடைபெறுகிறது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:51 pm

DIN

குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள இலவச கோடைகால கைப்பந்து பயிற்சி முகாமுக்கான வீரர்கள் தேர்வு வியாழக்கிழமை (மே 3)   நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட கைப்பந்து கழகச் செயலர் ஆர். ரத்தினபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைசிறந்த கைப்பந்து விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக 14 வயதுக்குள்பட்ட சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து கைப்பந்து பயிற்சி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கான தேர்வு, நாகர்கோவில் கல்கோவில் அருகில் உள்ள கைப்பந்து மைதானத்தில் மே  3 ஆம் தேதி மாலை 4  மணிக்கு நடைபெறும். இதில் 25 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மே 5ஆம் தேதி முதல்  தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை தொடர்ந்து 20 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.  அகில இந்திய விளையாட்டு வீரர் ஜி. முத்துராஜ்,  உடல்கல்வி ஆசிரியர் மணிராஜ் ஆகியோர் பயிற்சி வழங்குவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.