தென்தாமரைகுளம் அய்யா பதியில் கலிவேட்டை
தென்தாமரைகுளம் நாராயண சுவாமி பதியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.


தென்தாமரைகுளம் நாராயண சுவாமி பதியில் சித்திரைத் திருவிழாவையொட்டி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பதியில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ஆம் திருநாளில் அய்யா கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைமுன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, காலை 6 மணிக்கு உகப்படிப்பு, முற்பகல் 11.30 மணிக்கு பணிவிடை, நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் ஊர்வலமாக வந்து, கோயில் முன் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
11ஆம் திருநாளான திங்கள்கிழமை (ஏப். 30) நண்பகல் 12 மணிக்கு அய்யா திருத்தேரில் பவனி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறையினர், பதி குருமார்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...