தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் சாவு

ஆரல்வாய்மொழி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:47 am

DIN

ஆரல்வாய்மொழி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் கொத்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர் தாம்சன். இவரது மனைவி தேவமணி (55).  இவர்கள் வீட்டருகே திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த மாரி முருகன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை தேவமணியும்,  மாரிமுருகனும், பைக்கில் மாதவலாயத்துக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றனராம்.  சண்முகபுரம் பகுதியில் அங்கிருந்த வேகத்தடையை மாரிமுருகன் வேகமாக கடந்தாராம். அப்போது பைக் நிலைதடுமாறியதில் பின்னால் இருந்த தேவமணி தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.