பாடகி ஜானகி உடல் தகனம் எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கணவாய் மீன்பிடி தடைக்காலம்: குமரி மீனவர்களுக்கு கட்டுப்பாடு

கணவாய் மீன்கள் இனவிருத்தி காலத்தையொட்டி, குமரியில் கணவாய் மீன்களைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:00 am IST

கணவாய் மீன்கள் இனவிருத்தி காலத்தையொட்டி, குமரியில் கணவாய் மீன்களைப் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.
 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட்  முதல் அக்டோபர் வரை கணவாய் மீன்களின் இன விருத்தி காலமாகும். எனவே, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீன் பிடி விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி, விசைப்படகுகள் 25 பாகம் கடல் ஆழத்துக்கு மேற்பட்ட கடல் பகுதியில்தான் தொழில் செய்ய வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் விசைப்படகுகள் கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் தொலைவிற்குள் வரக்கூடாது. நாட்டுப்படகுகள் கூட்டமாக, மீன்பிடித்தொழில் புரியும் இடத்தில் மீன்பிடி விசைப்படகுகள் தொழில் புரிய கூடாது.
நிகழாண்டில், கணவாய் மீன் இனவிருத்தி, பருவகாலத்தில், விசைப்படகு மீனவர்களும் நாட்டுப்படகு மீனவர்களும் குறிப்பிட்ட வரையறைக்குள்ளும், சுமுகமாகவும் மீன்பிடித் தொழில் செய்ய கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இந்த விதிமுறைகளை மீறி மீன்பிடிதொழிலில் ஈடுபடும் விசைப் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ்,  தொழில் முடக்கம் மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.