ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

குழித்துறை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: தடுப்பணை வழியாக செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில்  பெய்த பலத்த மழையால், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 8:04 am IST

கன்னியாகுமரி மாவட்டத்தில்  பெய்த பலத்த மழையால், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், குழித்துறை தடுப்பணை வழியாக நடந்து செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் மேம்பாலம் பணிகள் காரணமாக பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் குழித்துறை தபால் நிலைய சந்திப்பிலிருந்து வெட்டுவெந்நிக்கு, குழித்துறை தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக சென்று வந்தனர்.
தற்போது குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருள்காட்சி நடைபெற்று வருவதால், இப் பொருள்காட்சியைக் காண மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெட்டுவெந்நியிலிருந்து குழித்துறை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக நடந்து செல்கிறார்கள்.
இந்நிலையில்,  குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையை தாண்டி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
எனவே, குழித்துறை தடுப்பணை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் இரு கரையோர பகுதிகளிலும் குறுக்காக கம்பிகள் அமைக்கப்பட்டு, பொதுப்பணித்துறையின் நீராதார அமைப்பால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் குழித்துறையிலிருந்து வெட்டுவெந்நிக்கு நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.