‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

போக்குவரத்து காவலரை தாக்க முயற்சி: சகோதரர்கள் கைது

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விபத்தை ஏற்படுத்திவிட்டு, போக்குவரத்து காவலரை தாக்க முயன்றதாக, சகோதரர்களை போலீஸார்  

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விபத்தை ஏற்படுத்திவிட்டு, போக்குவரத்து காவலரை தாக்க முயன்றதாக, சகோதரர்களை போலீஸார்  கைது செய்து விசாரித்து வருகின்றனர். வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பைக்கில் வெளியேவந்த இவர்மீது,  கரியமாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பால் வந்த பைக் மோதி விபத்து ஏற்பட்டதாம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜான்பால் ஐயப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அங்குவந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றாராம். அப்போது ஜான்பால் மற்றும் அவரது சகோதரர் சொர்ணபால் ஆகியோர், ஆய்வாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து வழக்குப் பதிந்த நேசமணி நகர் போலீஸார், சகோதரர்கள் இருவரையும் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.