அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம்,  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் மற்றும் விண்வெளி பூங்கா அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 2:46 am

DIN

தூத்துக்குடி மாவட்டம்,  குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் மற்றும் விண்வெளி பூங்கா அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்,  பிரதமர் நரேந்திரமோடி, இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு: பூமத்தியரேகையின் மிக அருகேயுள்ள நேர்கோட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம்,  குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி இந்தியாவின் 4ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைத்திட மிகவும் பொருத்தமான இடமாகும். ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட் ஏவும்போது ராக்கெட் அங்கிருந்து மேல் நோக்கி புறப்பட்டு இலங்கையைச் சுற்றிதான் பூமத்திய ரேகையில் தனது பாதையை அடைய முடிகிறது. இதனால் ராக்கெட்டில் 4 நிலைகள் மூலமே விண்ணுக்கு ராக்கெட்டை கொண்டு செல்ல தற்போது முடியும். ஆனால் குலசேகரன்பட்டினத்தில் 3 நிலைகள் மூலம் எளிதாக ராக்கெட்டை இலக்குக்கு கொண்டு செல்ல முடியும். இதனால் ராக்கெட்டின் எடையும் 25 சதவீதம் குறையும். எரிபொருளும் மிச்சமாகும். இதன் மூலம் 1 ராக்கெட்டை ஏவ சுமார் ரூ.110 கோடி மிச்சமாகும். 
குலசேகரன்பட்டினம் மழை மறைவு பிரதேசமாகும். மேலும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் இடமும் தேவைக்கு அதிகமாக அரசு தரிசு நிலமும்,  புறம்போக்கு இடமும் உள்ளன.  எனவே, குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதன்மூலம் தூத்துக்குடி,  திருநெல்வேலி,  கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் பொருளாதார வளம் பெற வாய்ப்பு ஏற்படும். 
எனவே, குலசேகரன்பட்டினத்தில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் மற்றும் விண்வெளி பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.