தோவாளை பண்டாரபுரம் மைலாடி விலக்கில் உள்ள பாலத்தில் பைக் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிபாரதி (25). இவர், நண்பர் தர்மபுரத்தைச் சேர்ந்த பிரபாகரனுடன், தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நாகர்கோவிலிலிருந்து - ஆரல்வாய்மொழி குமாரபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம். அப்போது பைக் மைலாடிவிலக்கில் உள்ள புதிய பாலத்தில் நிலை தடுமாறி மோதியதில் பலத்த காயமடைந்த மணிபாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீஸார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








