/

வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா: ஆக. 29இல் சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க  வேண்டுமென கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  

Updated On :23 ஜூலை 2018, 7:55 am IST

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்க  வேண்டுமென கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில்,  அதன் தலைவர் ஸ்ரீராம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு இம்மாவட்டத்திலிருந்து ஏராளமானோர் நாள்தோறும் செல்கின்றனர். இங்கிருந்து நேரடி ரயில் வசதி இல்லாததால், ஏதாவது ஒரு ரயிலில் திருச்சி சென்று, அங்கிருந்து நாகப்பட்டினம் செல்லும் ரயிலில் செல்கின்றனர். இதனால் ஏற்படும் அவதியை தவிர்க்க பேருந்துகளிலும், தனியாக வாடகைக்கு வேன்கள் பிடித்தும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.
இக்கோயில் ஆண்டு திருவிழா ஆக. 29ஆம் தேதி தொடங்கி செப். 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு திருவனந்தபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகமான பக்தர்கள் செல்வர். 
எனவே, திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் அறிவித்து, இரு மார்க்கங்களிலும் குமரி மாவட்ட பயணிகளுக்கு பயன்படும்படியாக காலஅட்டவணை அமைத்து, நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லதக்க வகையில் இயக்க வேண்டும். 
மேலும், சிறப்பு ரயில்களை கடைசி நேரத்தில் அறிவிக்காமல், குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பாக அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.